திமுக வேட்பாளரின் மகனை பிடித்த தேர்தல் பறக்கும் படை..!

share on:
Classic

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தின் மகனை தேர்தல் பார்வையாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஞானதிரவியம் போட்டியிடுகிறார். அவரது மகன் தினகரன் நண்பர்களுடன் இணைந்து நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருப்பதுறை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற தேர்தல் பார்வையாளர்கள், திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தின் காரை சோதனையிட்டனர். அப்போது ரூ. 3.38 லட்சம் பணமும், 12 தபால் ஓட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவரை சந்திப்பு காவல்நிலையதுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan