பிரத்யேக பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை..!

share on:
Classic

புதுச்சேரியில் கண் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு பிரெய்லி அடையாளம் கொண்ட பிரத்யேக வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையமானது அனைவரும் அணுகும் வகையில் தேர்தல் அமைய வேண்டும் என அறிவுறுத்தியதுடன், பார்வையற்றோருக்கு, சில விதிகளோடு பிரெய்லி அடையாளம் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக தர அறிவுறுத்தியிருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 1,036 பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி மொழியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை புதுச்சேரி தேர்தல் துறை தயாரித்துள்ளது. இந்த முறை தற்போது இந்த தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan