மாற்று கருத்தையும் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு..!

share on:
Classic

தேர்தல் ஆணையர்களின் மாற்று கருத்துக்களும் பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மீதாக தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பான விசாரணையின் போது, தனது கருத்து பதிவு செய்யப்படாததற்கு அதிருப்தி தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார். இதன் பிறகு நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க இன்று தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற்றது. அதில், பெரும்பான்மை கருத்து எதுவாக இருந்தாலும், மாற்று கருத்தையும் பதிவு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan