303 தொகுதிகளில் பாஜக வெற்றி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

share on:
Classic

மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக அதிக இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது. இதனிடையே, மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேபோல், ஒடியாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள கட்சி 112 இடங்களை வென்றுள்ளது. இதன்முலம் ஒடியாவில் 5வது முறையாக நவீன் பட்னாயக் முதலமைச்சராகிறார். பாஜக 23 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றினர். மேலும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு தொகுதி வென்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan