வேலையில்லா திண்டாட்டம்..பொய்யான புள்ளி விபரம்..மத்திய அரசு மீது புகார்..!

share on:
Classic

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பொய்யான புள்ளி விபரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக 108 பொருளாதார நிபுணர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையில்லா திண்டாட்டம், வறுமை பட்டியல் உள்ளிட்டவை குறித்து புள்ளியியல் துறை கணக்கெடுப்புகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அறிக்கையை மத்திய அரசு திடீரென நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, மத்திய அரசு தவறான புள்ளி விபரங்களை தாக்கல் செய்ய கட்டாயப்படுத்துவதாக 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதாகவும், வேலையில்லா திண்டாட்டம் குறித்த தரவுகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புள்ளிவிபரங்களை மத்திய அரசுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு இதற்கு முன் எந்த அரசு அழுத்தம் கொடுத்ததில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev