பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா..!!

share on:
Classic

இந்தியா 2019-ல் 7.3% பொருளாதார வளர்ச்சியும், 2020-ல் 7.5% வளர்ச்சியும் அடையும் என்று சர்வதேச பண நிதியம்  தெரிவித்துள்ளது. 

2018-ல் சீனாவின் வளர்ச்சி 6.6%-ஆக இருந்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.1% ஆக இருந்தது. வருடாந்திர கூட்டத்திற்காக உலக பொருளாதாரம் தொடர்பான அறிக்கையை உலக வங்கி மற்றும் சர்வதேச பண நிதியம் ஆகியவை வெளியிட்டன. அந்த அறிக்கையில் இந்தியா 2019-ல் 7.3% பொருளாதார வளர்ச்சியும், 2020-ல் 7.5% வளர்ச்சியும் அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 2019-ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.3%, 2020-ல் 6.1%-ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலீடுகளை மீட்டெடுத்தல், பணவியல் கொள்கையில் கொண்டுவந்த மாற்றங்கள், நிதிக்கொள்கையினால் ஏற்பட்ட உத்வேகம் ஆகியவற்றால் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியை இணக்கமாக வலுப்படுத்துவதன் மூலமும், மானியங்களை குறைப்பதன் மூலமும் மேலும் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya