தனது வாக்கினை பதிவு செய்தார் எடப்பாடி பழனிசாமி..!!

share on:
Classic

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் காலை சுமார் 7.45 மணியளவில் சேலம் எடப்பாடியில் சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். மக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வாக்களிப்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தனது வாக்கினை அளித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya