ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

share on:
Classic

கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிபக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016 ஜூன் 30-ல் இருந்து மூன்று ஆண்டுகளைக் கடந்து பணியாற்றுபவர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஜூலை 3-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

aravind