கல்லூரியில் ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது குறித்து ஆய்வு..!

share on:
Classic

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்த கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாணவிகளுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை கல்லூரியில் ஆய்வு செய்து தெரிவிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan