நீரிழிவு நீக்கும் முட்டை : ஆய்வில் புதிய தகவல்

share on:
Classic

தற்போது சாதாரணமாகி விட்ட மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. அதில் டைப் 2  நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம்  குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

நீரிழிவு நோய் : 
 

நீரிழிவு நோய் என்பது இரத்த சர்க்கரை அதிகரிப்பை கொடுக்கக்கூடிய வளர்ச்சிதை மாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும்.இது சர்க்கரை வியாதி என்றும் அழைக்கப்படுகிறது.கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும் இது தான் சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் வருவது ஏன்?

இன்சுலின் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது தான் இந்த நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம் .நீரிழிவு நோயை மூன்று வகைப்படுத்தலாம்.

முதல் வகை : 

குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு  இந்த முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.

இரண்டாம் வகை : 

பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில்மிக மெதுவாகத்தான்  இன்சுலின் சுரக்கும்  எனவே அவர்கள் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 

மூன்றாம் வகை : 

இந்த வகை நீரிழிவானது இரண்டு முதல் நான்கு சதவீத கர்பிணிப்பெண்களுக்கு கர்ப காலத்தில் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும்,பிற்காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் நீரிழுவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

நீரிழிவை கட்டுப்படுத்த ஆய்வு : 
 

ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல… 20 வருடங்களாக ஆண்களை நான்கு பிரிவுகளாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், தினம் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. அதுவே, வாரத்திற்கு 2 முட்டைகள் மட்டும் சாப்பிட்டு வந்தவர்களுக்கு பாதிப்பில் முன்னேற்றமில்லை.
 
கிழக்கு ஃபின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டெஃபானியா நோர்மன் நடத்திய ஆய்வு முடிவின் படி, தினம் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆண்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு அடியோடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தினம் ஒரு முட்டை சாப்பிடுவது ஆண்களின் உடலை டைப் 2 நீரிழிவில் இருந்து பாதுகாக்கும் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

youtube