உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை..!

share on:
Classic

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் உல கோப்பையில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார்.

ரியோ டி ஜெனிரோவில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம், துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலகக் கோப்பை தங்கம் வென்ற 3-வது இந்திய பெண்மணி என்ற பெருமையை இளவேனில் பெற்றுள்ளார். இதற்கு முன் அபூர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

20 வயதான இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து, கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த சியோனாய்ட் மெக்கின்டோஷ் 250.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

News Counter: 
100
Loading...

Ragavan