வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து..?

share on:
Classic

துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியதைத் தொடர்ந்து, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலுார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 30-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 10 லட்சம் பணம் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கனக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, வருமான வரித்துறையினர், மாவட்ட தேர்தல் அலுவலர், போலீசார் ஆகியோர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தனர். அவற்றின் அடிப்படையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அனுப்பினார். இந்தநிலையில், வேலுார் தொகுதியில், தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும், அந்த தொகுதியில் அடங்கிய குடியாத்தம், ஆம்பூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்தாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan