தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு..!

share on:
Classic

தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளநிலையில், நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர். இதனிடையே, இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan