இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது..!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதேபோன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு வருகைதந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் மேற்கொண்டனர். இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனையொட்டி, இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேபோன்று 2-ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும், பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகள், மஹாராஷ்ட்டிராவில் 10 தொகுதிகள், அசாம் மற்றும் பீஹார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள் உட்பட, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan