பாதுகாப்பு படைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரித்த மோடி : அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

share on:
Classic

பிரதமர் மோடி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு படைகளை பற்றி கூறி வாக்கு சேகரித்தது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி “ முதல்முறை வாக்காளர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்கள் முதல் வாக்கை அர்ப்பணிக்க முடியுமா..? புல்வாமா பயங்கரவாத தாக்குதல் வீரமரணம் அடைந்தவர்களுக்கு உங்கள் வாக்கை அர்ப்பணிக்க முடியுமா..” என்று கூறி வாக்கு சேகரித்தார். 

மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து மோடி பேசியது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அலுவலர் விரைவில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அரசியல் காரணங்களுக்காக தேர்தல் பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு படைகளை கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 19-ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya