ஆட்சியாளர்களின் கூட்டணி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : வாக்களித்த பின் கனிமொழி பேட்டி..

share on:
Classic

ஆட்சியாளர்களின் கூட்டணி போல தேர்தல் ஆணையம் செயல்படுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் பள்ளியில் திமுக வேட்பாளர் கனிமொழி அவரின் தாயாருடன் வாக்களித்தார். அதன்பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடக்க வேண்டும். யாரையும் தரக்குறைவாக பேசும் பழக்கம் எனக்கில்லை. வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக ஆட்சியாளர்களின் கூட்டணி போல செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த வருமான வரி சோதனை நடத்தியது இந்த தேர்தலில் மிகத் தெளிவாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya