அமித் ஷா பேரணியில் கலவரம் : அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

share on:
Classic

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து அம்மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் முழக்கம் எழுப்பியவாறு கலந்து கொண்டனர். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் நின்றனர். இதில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் கலவரம் வெடித்தது. 

கற்களை,கம்புகளை வீசி இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்சனை குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரம் அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind