"லவாசாவின் கருத்துகளை வெளியிட்டால் தனிநபரின் உயிருக்கு ஆபத்து" தேர்தல் ஆணையம் விளக்கம்

share on:
Classic

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்துகளை வெளியிட்டால் தனிநபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தேர்தல் ஆணையம் விளக்களித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில், இருவரும் விதிமீறல்களை மீறவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த கருத்துக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்து தனது குறிப்புகளை பதிவிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அசோக் லவாசா தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தார். 

இதையடுத்து அசோக் லவாசாவின் கருத்துகள் இறுதி அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆனால் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அசோக் லவாசவின் கருத்துகளை வெளியிட வேண்டும்படி தகவல் அறியும் உரிமை கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அசோக் லவாசாவின் கருத்துகளை வெளியிட்டால் தனி நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என விளக்கமளித்து, குறிப்புகளை வெளியிட முடியாது என பதிலளித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind