வாக்களார் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயர் இல்லாதது ஏன்..?

share on:
Classic

வாக்களார் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயர் இல்லாதது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடக தேர்தல் ஆணையத்தின் தூதராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து  தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.  

அதில், ராகுல் டிராவிட் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், அவரது சகோதரர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேயே டிராவிட் பெயர் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், தனது பெயரை சேர்க்குமாறு டிராவிட் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind