தலித்களுக்கு எதிரான மனநிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது : மாயாவதி குற்றச்சாட்டு

share on:
Classic

தலித்களுக்கான எதிரான மனநிலையை தேர்தல் ஆணையம் கொண்டுள்ளதாகவும், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைத்திற்கு துணிச்சல் இல்லை எனவும் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய 48 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது ஜனநாயகமற்ற நடவடிக்கை. வரலாற்றில் இது கருப்பு நாளாக இருக்கும். என் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு உண்மையாக தேர்தல் நடத்தை விதகளை மீறும் மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ராணுவத்தை பயன்படுத்தி மோடி வாக்கு சேகரித்து வருகிறார். அமித்ஷா குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வை பரப்பி வருகிறார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தலித்களுக்கு எதிரான மனநிலையே காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டங்களில் பேசியதால் மாயாவதி 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. 

News Counter: 
100
Loading...

Ramya