ராகுல் காந்தி இந்திய குடிமகன் இல்லையா..? தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்..!

share on:
Classic

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமேதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் துருவ் லால் என்பவர், ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என அமேதி தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இங்கிலாந்தில் ராகுல் காந்தி, தனது நிறுவனத்தை பதிவு செய்த போது, தான் பிரிட்டன் குடிமகன் என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்திய பிரஜை அல்லாத ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது. எனவே, ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை பரிசீலிக்கும் பணியை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan