மம்தா பானர்ஜி பற்றிய பாகினி திரைப்பட டிரெய்லருக்கு சிக்கல்..!

share on:
Classic

மம்தா பானர்ஜி தொர்பான திரைப்பட டிரைலரை இணையதளத்தில் இருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை குறிப்பு தொர்பாக பாகினி பெங்கால் டைகிரஸ் என்ற திரைப்படம் மே 3 ஆம் தேதி வெளியாக இருந்தது. இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த 13 ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் திரைப்பட டிரைலரை இணையதளங்களில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

தேர்தல் முடியும் வரை அரசியல் தலைவர்கள் குறித்த எந்த வாழ்க்கை குறிப்புகளும் வெளியிடக்கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி குறித்த திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind