தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு..!

share on:
Classic

தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவது, வாக்கு பதிவு விழுக்காட்டை அதிகரிப்பது தொடர்பாக விவாதித்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அசோக் லவாசா, தமிழகத்தில் தான் அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கடந்த முறையை காட்டிலும் 1,946 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அசோக் லவாசா தெரிவித்தார். தமிழக்கத்தில் காலியாகவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், ரபேல் தொடர்பான புத்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லவாசா கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan