இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கலந்துகொள்வதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ டெல்லி சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
 

News Counter: 
100
Loading...

vinoth