தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு..!

share on:
Classic

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இந்த முறை 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தல் தேதியுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan