வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.!

share on:
Classic

சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து துணை தேர்தல் ஆணையர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராஜ் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்து வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். இந்த பயிற்சி முகாமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தலைமை தேர்தல் ஆணைய துணை ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வரும் 23-ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தலைமை தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர்கள் சந்திப் சக்சேனா மற்றும் உமேஷ் சின்ஹா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan