தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே ஓ.பி.எஸ் மகனை “எம்.பி” என குறிப்பிட்டதால் சர்ச்சை : எதிர்ப்புக்களை தொடர்ந்து பெயர் நீக்கம்..

share on:
Classic

தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே எம்.பி என கல்வெட்டில் போடப்பட்டதற்கு எதிர்ப்புகள் வந்த நிலையில், தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் பெயர் கல்வெட்டில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் குச்சனூரில் காசி ஸ்ரீஅன்னபூரணி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என பெயர் பட்டியல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவின் பெயரும், தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் பெயரும் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் எதிரொலியாக  ரவீந்திரநாத் பெயர் கல்வெட்டில் இருந்து  மறைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பெயர் விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya