மாதிரி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு..

share on:
Classic

அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இம்முறை விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் எண்ணிக்கையும் கணக்கிட உள்ளதால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தலைமை  தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர்கள் சந்திப் சக்சேனா மற்றும் உமேஷ் சின்ஹா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ramya