”சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்”

share on:
Classic

சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2019 வரை போக்குவரத்துத் துறையில் 37,782 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அனைத்து போக்குவரத்து கழகங்கள், ஒரே குடையின் கீழ் இணையதளத்தில் ஒருங்கிணைக்க குழு அமைக்கப்படும் என்றும் கூறினார். சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind