சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை மீண்டும் விரைவு மின்சார ரயில் சேவை...

share on:
Classic

சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் செங்கல்பட்டு வரை ஜூன் 1-ஆம் தேதி முதல் விரைவு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் சென்ற மின்சார விரைவு ரயிலில் பயணித்தவர்கள் 5 பேர் பரங்கிமலையில் தடுப்புக்கட்டையில் மோதி பலியானார்கள். இதையடுத்து, அந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு ரயில் நிலைய நடைமேடை மற்றும் தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனிடையே, விரைவு மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து காலை 7.50 மணிக்கு, சென்னை கடற்கரைக்கு விரைவு மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல, சென்னை கடற்கரையிலிருந்து - திருமால்பூருக்கு மாலை 6.15 மணிக்கு விரைவு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan