காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் பலி..!!

share on:
Classic

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காட்டு யானை தாக்கியதில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாகாளி என்பவரை, அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல், அதே பகுதியில் நேற்று நடந்து சென்ற சிறுமி ரஞ்சனியை, யானை தாக்கியது. இதில் சிறுமி ரஞ்சனி உயிரிழந்தார். யானை தாக்கி அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

vinoth