யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புயானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு

யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு

யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு இன்று சீல் வைப்பு

யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதன் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கவும் கடந்த ஆக.,9ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உதகை அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள்,அரசு கட்டடங்கள் என 821 கட்டடங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக யானைகள் வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து, விடுதிகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பாக நோட்டிஸ் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 27 தனியார் விடுதிகளுக்கும் சீல் வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.