இனி நிலவிற்கும் டூர் போகலாம் - மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஓடம் தயார்..!

share on:
Classic

மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஓடம் தயாராகிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான முயற்சி நம் வாழ்வின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், விண்வெளியில் விண்கலன்களை அனுப்பி புதிய விஷயங்களை கண்டறிவதில் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு கொள்கின்றன.

சந்திரன்: 

நிலவில் பல்வேறு வளங்களும், தனிமங்களும் உள்ளன. அதை விண்வெளியிலிருந்து பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதே போல் நிலவின் மறுபக்கத்தில் ஆராய்ச்சி, நிலவிலிருந்த்து நேரலை என விண்கலன்களை அனுப்பி பல்வேறு நாடுகள் அசத்தி வருகின்றன. அதிலும் அடுத்த கட்ட முயற்சியாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

moon க்கான பட முடிவு

ககன்யான் திட்டம்: 

இந்திய சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம் என்று சுதந்திர தினத்தன்று நரேந்திர மோடி தெரிவித்தார் .அதன் படி 2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக அடுத்தடுத்து செயற்கைகோள்களை அனுப்பும் பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
 

ககன்யான் க்கான பட முடிவு

விண்வெளி ஓடம் :

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தமது ட்விட்டர் பக்கத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் விண்வெளி ஓடம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஓடம் செவ்வாய் மற்றும் நிலவிற்கு மனிதர்களை கொண்டு சென்று மீண்டும் பூமிக்கே திரும்பி வரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் விண்வெளி பயணத்துக்காக இந்த விண்கலன் சோதித்து பார்க்கப்படவுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்:

ஸ்பேஸ் எக்ஸ் உலகின் மிக சக்தி வாய்ந்த மிக பெரிய ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதனுடன்  ஒரு எலக்ட்ரிக் காரையும் அனுப்பி வைத்தது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் மூலமாக மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலனின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைத்து நாடுகளின் பாராட்டுகளையும், ஆச்சரியத்தையும்  ஏற்படுத்தி விட்டது.

தொடர்புடைய படம்

இஸ்ரோ சவால் : 

எலன் மஸ்கின் கண்டுப்பிடிப்பிற்கு சவால் விடும் வகையில் சில வாரங்களுக்கு முன் இஸ்ரோ தனது ராக்கெட்டை செங்குத்தாக நிறுத்தி வெற்றியும் கண்டது. இஸ்ரோவின் ககன்யான் திட்டம் எலன் மஸ்க் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்திற்கு நிகரான கண்டுபிடிப்பை தரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. 

isro க்கான பட முடிவு

News Counter: 
100
Loading...

youtube