CWC19 : நாளைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு..?

share on:
Classic

நாளை நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 ஆட்டங்களில் பங்கேற்று 5-ல் வெற்றியும், 1-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை 6 ஆட்டங்களில் பங்கேற்று 4-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ளது. 
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் காயத்தில் இருந்து முழுவதும் குணமடையாததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார், என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் குறைந்தது ஒரு ஆட்டத்தை வெல்ல வேண்டும்.
இரு அணிகளும் இதுவரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஆஸ்திரேலிய அணி 5-ல் வெற்றியும், இங்கிலாந்து அணி 2-ல் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணி : 
ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், லியாம் டாசன், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

ஆஸ்திரேலியா அணி : 
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் கூல்டர்-நைல், ஆடம் ஜாம்பா, நாதன் லியோன்.

News Counter: 
100
Loading...

Saravanan