இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

share on:
Classic

இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் 1 ரன்னிலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும் களமிறங்கி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்களையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்நிலையில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது ஆஸ்திரேலிய அணி. அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 85 ரன்களும் அலெக்ஸ் கேரி 46 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக வோக்ஸ், ரஷீத் தலா 3 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

 

News Counter: 
100
Loading...

Saravanan