இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி..!

share on:
Classic

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசினர், பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, வார்னரும் 9 ரன்களில் அவுட்டாகி அந்த அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார், இதனையடுத்து களமிறங்கிய ஸ்மித் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பெய்ர்ஸ்டோவும் 35 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேசன் ராய் தொடர்ந்து அதிரடி காட்டி 65 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, ரூட்டும், மார்கனும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் மோதவுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Saravanan