பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கு : நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை

share on:
Classic

நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில், நடைபெற்று வரும் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச்  சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோவில் முன் கடந்த 2015ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது. நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கோகுல்ராஜின்  தாய் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து 2 வாரங்களில் பதிலளிக்க நாமக்கல் சிபிசிஐடி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev