பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..!

share on:
Classic

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1,40,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார்.  இந்நிலையில், பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறைபாடுகள் அல்லது சந்தேகங்களை மாணவர்கள் தெரிவிக்க நான்கு நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

News Counter: 
100
Loading...

aravind