இன்று தொடங்குகிறது பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு

share on:
Classic

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், சேர்வதற்கான கலந்தாய்வை, இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து  4 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் சிறப்புப்பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தரவரிசையில் முதல் 80 பேரும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 58 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நாளையும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த நேரடி கலந்தாய்வு அனைத்தும், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட  உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind