பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

share on:
Classic

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. மூன்றாம் ஒருநாள் போட்டி ப்ரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 131 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஜாசன் ராய் 76 ரன்களும், பார்ஸ்டோவ் 128 ரன்களும் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் வெறும் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.

News Counter: 
100
Loading...

aravind