ஆஷஸ் தொடர் தோல்விக்கு பழிவாங்குமா இங்கிலாந்து..!

share on:
Classic

இங்கிலாந்து அணிக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.. 

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகிறது. அதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

அவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை கடந்தனர். வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடி 100 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது ஆஸ்திரேலிய அணி..

News Counter: 
100
Loading...

Saravanan