CWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு

share on:
Classic

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 ஆட்டங்களில் பங்கேற்று 5-ல் வெற்றியும், 1-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை 6 ஆட்டங்களில் பங்கேற்று 4-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ளது. 
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் காயத்தில் இருந்து முழுவதும் குணமடையாததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார், என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Saravanan