பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்....

share on:
Classic

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்...! கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி வெறும் விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. இரு அணிகளுக்கும் இடையில் நடக்கும் போர் என்றே பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பிரச்சனைகளால் இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இரண்டு அணிகளும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது ரசிகர்களிடையே எழும் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. 

இந்திய பாகிஸ்தான் போட்டிகளை காண ரசிகர்கள் அதிக பணம் செலுத்தவும் தயங்க மாட்டார்கள். ஆட்டம் நடக்க உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 26 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் இப்போது அதை மறுவிற்பனை செய்து அதிக அளவு பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை Viagogo, இணையதளமானது விற்பனை செய்து வருகிறது. அந்த இணைய தளம் அளித்துள்ள தகவலின் படி 480 நபர்கள் தங்கள் டிக்கெட்டுகளை மறு விற்பனை செய்யும் படி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்த பட்சம் ரூ.20,000 லிருந்து ரூ.60,000 வரை விற்பனையாகிறது.

இதற்கு முன் இரு அணிகளும் 6 உலகக்கோப்பையில் சந்தித்துள்ளன. அந்த ஆறு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

News Counter: 
100
Loading...

Saravanan