உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் : இங்கிலாந்து அணி அபார வெற்றி

share on:
Classic

நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின, இதில் இங்கிலாந்து அணி டாஸ் கைப்பற்றிய நிலையில் பீல்டிங்கை தேர்வு செய்து அதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

வரும் 30ஆம் தேதி உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின,கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.  நூர் அலி ஸத்ரான்,முகம்மது நபி இருவர் மட்டுமே அணிக்கு தங்கள் பங்களிப்பை அளித்ததன் விளைவாக ஆப்கானிஸ்தான் 160 என்ற ஸ்கோரை எட்டியது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 17.3 ஓவரில் 161 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தனது அபார வெற்றியை பதிவு செய்த்து. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு மேலும் புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.    

News Counter: 
100
Loading...

Ramya