வெற்றிக்கு ரூட்டு போட்ட ”ரூட்”

share on:
Classic

ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கியது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது. அணியில் அதிக பட்சமாக நிக்கோலஸ் பூரன் 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
 
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடக்க ஆட்டக்கார்களாக பேர்ஸ்டோவ் மற்றும் ரூட் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பேர்ஸ்டோவ் 45 ரன்களில் அவுட்டாகி வெளியேற பின்னர் வந்த வோக்ஸ் உடன் இணைந்த ரூட் தனது சதத்தை நிறைவு செய்தார். 33.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி தனது வெற்றியை பதிவு செய்தது. அணியில் அதிக பட்சமாக 94 பந்துகளுக்கு 100 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.      
 

News Counter: 
100
Loading...

Saravanan