‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஏப்ரல் மாதம் வெளியிட திட்டம்..!!

share on:
Classic

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய படம் தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா' நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமலே இருந்துருந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழும் பெற்றுள்ளது.

இப்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் ரெடி ஆகிவிட்டதாகவும், டிரைலர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா என பலர் நடிச்சிருக்காங்க. கூடிய சீக்கிரமே இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan