PF மீதான வட்டி விகிதம் உயர்வு... 6 கோடி சந்தாதாரர்களே சந்தோஷமான செய்தி

share on:
Classic

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மீதான வட்டி 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வட்டி விகிதம் 0.10% உயர்வு:
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கான 'ஓய்வூதிய நிதிக்குழுவினர்’ கலந்துகொண்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2018-19ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை 8.65%-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 2017-18ஆம் நிதியாண்டு வரை புழக்கத்தில் இருந்த 8.55% என்ற வட்டி விகிதம் தற்போது மாற்றமடைகிறது. 

மத்திய அமைச்சரின் கருத்து:
6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த திடீர் முடிவானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இம்முடிவை மேற்கொண்டதாக தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததன் பிறகு புதிய வட்டி விகிதமானது அமலுக்கு வரவுள்ளது. முந்தைய நிதியாண்டுகளில் புழக்கத்திலிருந்த வட்டி விகிதம் குறித்த விவரங்கள் பின்வருமாறு,

ஊழியர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதங்கள்
நிதியாண்டு வட்டி விகிதம்
2012-13 8.50%
2013-14 8.75%
2014-15 8.75%
2015-16 8.80%
2016-17 8.65%
2017-18 8.55%

முதலீட்டு விவரம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் பரிமாற்ற வர்த்தக நிதியத்தில் (ETF) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முதலீடு செய்து வருகிறது. EPFO-வின் ரூ. 1.5 கோடி முதலீட்டு வைப்பில் இருந்து 15% அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ETF-ல் முதலீடு செய்யப்படுகிறது. இதுவரை, ரூ. 50,000 கோடி அளவிற்கு ETF-ல் முதலீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

mayakumar