சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 50% நிதி பங்களிப்பு வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக முதல்வர்...

share on:
Classic

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் திருப்பூருக்கு வந்த பிரதமரிடம், இந்தக் கடிதத்தை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அதில், தமிழக அரசு 50 சதவீத நிதி, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த முதல்கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கான 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் திட்டத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்க, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind