கடத்தப்பட்ட 1400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..!

share on:
Classic

விழுப்புரம் அருகே மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் 1400 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

விழுப்புரம் - திண்டிவனம் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, திருவாமுத்தூர் பகுதியில் சிலர் எரிசாராயம் இறக்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், விரைந்து சென்ற போலீசார் அங்கே, ஒரு ஓடையில் 40 கேன்களில் 1400 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கீழ் எடையாளத்தைச் சேர்ந்த தனலட்சுமி,விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

News Counter: 
100
Loading...

sajeev