கையில காசு வாயில தோச... ரிலையன்ஸை வெறுப்பேற்றும் எரிக்சன் நிறுவன சி.இ.ஒ.

share on:
Classic

சேவையைப் பெறுபவர் யாராக இருந்தாலும் அதற்குரிய கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டுமென்ற தங்களது கொள்கை உலகிற்கு சத்தம் போட்டு சொல்லப்பட்டிருப்பதாக எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவமதிப்பு வழக்கு:
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ. 550 கோடியை திருப்பித் தராமல் பாக்கி வைத்துள்ளதாக ஸ்வீடனை தலைமையகமாகக் கொண்ட ‘எரிக்சன்’ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அனில் அம்பானி ரூ. 550 கோடியை எரிக்சன் நிறுவனத்திடம் திருப்பிச் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.  ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பிச் செலுத்தாததால் மீண்டும் எரிக்சன் நிறுவனம் சார்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

அபராதம் மேல் அபராதம்:
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனில் அம்பானியை குற்றவாளி என்றும், அடுத்த 4 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்  எரிக்சன் நிறுவனத்திடம் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதித்த குற்றத்திற்காக ரூ. 1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

குசும்புக்கார சி.இ.ஓ...!
ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் எரிக்சன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி போரே எக்கோல்ம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களை அலட்சியப்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுத்திருப்பதாகவும் கூறினார். எரிக்சன் நிறுவனத்தின் சேவையை எவரும் இலவசமாக பெற்று விட முடியாது என்றும், தங்களது சேவையை பெற்றவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கான கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும் எனவும் போரே எக்கோல்ம் தெரிவித்தார். மேலும், கொடுத்த சேவைக்கு காசு வந்தே ஆக வேண்டும் என்ற எரிக்சன் நிறுவனத்தின் கொள்கை தற்போது உலகிற்கு உரக்க சொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

News Counter: 
100
Loading...

mayakumar